அல் குர்ஆன்

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி "அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார்.

அல் குர்ஆன்

"இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்!

அல் குர்ஆன்

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!'' என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.

அல் குர்ஆன்

"ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக் கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.

அல் குர்ஆன்

"என் சமுதாயமே! இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. என்னைப் படைத்தவனிடமே எனக்குரிய கூலி உள்ளது. விளங்க மாட்டீர்களா?

Sunday, 17 April 2011

இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்? வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?


வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படி போதிக்கின்றன. ஆனால் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்து பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை வந்தேறிகள் என்று சொல்லும் பலரும் வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கிமு 1500 - கிமு 500)தஸ்யுக்கள் என்னும் உள்நாட்டு மக்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படையெடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரியர்கள் ரிக் வேத காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களை போரிட்டு அடிமையாக்கி சூத்திரர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள்.

ராஜபுத்திரர்கள் கூட துருக்கியர் குடியேறிய காலத்தில் இங்கு குடியேரியவர்கள்தான். செளகான்,பரிகரர்,சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான் எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? ஆரியர்கள் வருகை எனச் சொல்லும் நம் பாடநூல்கள் இஸ்லாமியர் படையெடுப்பு எனச்சொல்வது பிஞ்சு நெஞ்சில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்த நாட்டு குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள் தான்.

யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறியானது பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கக் காரணமாகியுள்ளது. இளைஞர்களும் பொதுமக்களும் படித்தவர்களும் உண்மையான பிரச்சனையிலிருந்து தங்களின் கவனத்தை திருப்பி வகுப்பு வெறிக்குப் பழியாவதற்கு இஸ்லாமியர் பற்றி மதவெறியர்களாலும் பத்திரிக்கைகளாலும் கல்ல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கட்டுக்கதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே இந்தக் கட்டுக்கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது ஜனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்நிலையில் வரலாற்று ஆதாரங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம். இங்கே சொல்லப்பட்டவற்றை ஆதாரங்களுடன் மறுத்தால் ஏற்றுக்கொள்கிறோம்.

Wednesday, 13 April 2011

பேய் பிசாசு

கலைஞர் தொலைக்காட்சியின் ‘‘ரோஸ் நேரத்தில்’’ ஓர் அறிவிப்பு; பேய் இருப்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்பதுதான் அந்த அறிவிப்பு பாராட்டத்தக்க ஒன்றே! அதனை ஏற்றுக்கொண்டு, இதோ நாங்கள் நிரூபிக்கிறோம் என்று கூறி ஒரு அணியினர்; பேயாவது, வெங்காயமாவது! எங்கே இருக்கிறது பேய்? நிரூபிக்க முடியுமா? ‘என்மீது பேயை ஏவி நிரூபிக்கட்டும்; அவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் தருகிறேன்’ என்று கூறி அதே இடத்தில் காசோலையைப் பூர்த்தி செய்து சவால் விட்டார் கருஞ்சட்டைத் தோழர் ம. திருநாவுக்கரசு. (தற்போது தண்டையார்பேட்டைவாசி _ சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம்).
 “பேய்கள் பற்றிய உண்மையான நிலையை இனி காண்போம்.
 பேய்கள் என்றொரு படைப்பினம் இல்லை. இறந்தவர்களின் ஆவி உயிருள்ளவர் மேல் வந்து ஆதிக்கம் செலுத்துவதும் இல்லை. ஒரு மனிதனிடம் இருந்த ஷைத்தான் அவனது மரணத்திற்குப் பின் இன்னொருவரிடம் வந்து குடியேறுவதுமில்லை என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் நாம் நிரூபித்தாலும் அதை நம்பாத உள்ளங்களும் இருக்கின்றன. இதற்கு நியாயமான காரணங்களும் அவர்களிடம் உள்ளன. எனவே அந்தத் தரப்பினரின் நியாயமான ஐயங்களை அகற்றினால் மட்டுமே பேய்களை மனித உள்ளங்களிலிருந்து முழுமையாக நீக்க முடியும்.
 நேற்று வரை சாதாரணமாக இருந்த மனிதன் திடீரென்று அசாதாரணமானவனாக மாறி விடுகிறான். அவனது பழக்கவழக்கங்கள் விசித்திரமாக மாறிப் போய் விடுகின்றன; முன்பிருந்ததை விட அவனது பலம் அதிகமாகி விடுகின்றது; இத்தகைய நிலைக்கு ஆளான சிலர் மறைவான சில விஷயங்களைக் கூட அறிவிக்கின்றனர். இதற்கு முன் அறிந்திராத மொழிகளைக் கூட சில பேர் பேசி விடுகின்றனர்; பயந்த சுபாவம் கொண்ட இத்தகையோர் அடியோடு அச்ச உணர்வு நீங்கியவர்களாகி விடுகின்றனர். இன்னும் பல வியப்பூட்டும் மாறுதல்கள் அவர்களிடம் ஏற்பட்டு விடுகின்றன. இவையெல்லாம் மனித சக்தியை மிஞ்சக் கூடிய ஒரு சக்தியால் மட்டுமே சாத்தியம். அதனையே பேய்கள் என்கிறோம் என்பது இவர்களது நியாயமான சந்தேகம்.
 மற்றொரு சந்தேகமும் கூட உண்டு. பேய் பிடித்ததாக நம்பப்படுவோருக்கு எவ்வளவோ உயர்வான மருத்துவ சிகிச்சையளித்தும் நிவாரணம் கிடைக்காமல் ஒரு சாமியாரிடம், ஒரு மந்திரவாதியிடம், ஒரு பூசாரியிடம், ஒரு மௌலவியிடம் மந்திர சிகிச்சைப் பெற்றதும் உடனடி நிவாரணம் கிடைக்கின்றது. மேலும் அந்தப் பேய்களே தாங்கள் ஓடி விடுவதாகக் கூறி விட்டு ஓடிப் போகின்றன.
 மருத்துவத்தால் ஆகாதது மந்திரத்தால் ஆகிறது என்பது பேய்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. தர்காக்கள் மற்றும் கோயில்களில் அதிசயமான முறையில் அவர்கள் குணப்படுத்தப்படுகின்றார்கள். “ஆபரேஷன் உட்பட பலவித முறைகளால் தர்காக்களில் குணப்படுத்தப்படுகின்றனர். இதுவும் பேய்கள் இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது என்று இத்தகையோர் கூறுகின்றனர்.
 இந்த அதிசயங்களின் புதிரை விடுவிக்காமல் எடுத்து வைக்கப்படும் சான்றுகள் முழுமையான பலனையளிக்காது. எனவே இந்த அதிசயங்கள் பற்றிய புதிரை நாம் முதலில் விடுவிக்க வேண்டும். இது பற்றிக் கடுகளவு கூட சந்தேகம் இராத அளவுக்கு இது பற்றி நாம் ஆராய்வோம்.
 சமூக விரோதிகளும் குற்றங்களில் ஈடுபடுவோரும் தங்களைக் காத்துக் கொள்வதற்குப் பேய்களைப் பற்றி மக்கள் நம்புவது வசதியாக இருக்கிறது. இத்தகையோர் பேய்களைப் பற்றி கதைகளைக் கட்டிவிட்டு தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்கின்றனர். உதாரணமாக ஒரு இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ அல்லது கடத்தலில் ஈடுபட்டாலோ அது பிறரால் கண்டு  கொள்ளப்படக் கூடாது என்பதற்காக அந்த இடங்களில் பேய்கள் நடமாடுவதாக கதை கட்டும் அவசியம் இவர்களுக்கு ஏற்படுகின்றது. வேறு எந்த வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விட இது செலவு குறைந்ததாகவும் முழுப் பயனளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
ஒரு இடத்தில் பேய்கள் நடமாடுவதாக செய்திகள் பரவும் போது அந்த இடத்திற்கு காவல் துறையினர் கூட செல்வதற்கு அச்சப்படுவர். எவராலும் நெருங்க முடியாத பாதுகாப்பு வளையத்தை பேய்கள் ஏற்படுத்துகின்றன. தங்களின் ஏஜன்டுகள் மூலம் இப்படி வதந்திகளைப் பரப்புவதுடன் கூட இவர்கள் நின்று விடுவதில்லை. வதந்திகளை உண்மைப்படுத்தும் விதமாக சில ஏற்பாடுகளையும் செய்கின்றனர். இரவு நேரங்களில் சலங்கையொலியை ஏற்படுத்துதல், நள்ளிரவில் கற்களையும் மற்ற பொருட்களையும் வீடுகளின் மேல் வீசுதல், தீப்பந்தங்களைக கொளுத்தி பயமுறுத்துதல் இன்னும் பலவாறான ஏற்பாடுகளைச் செய்து அரைகுறை தைரியசாலிகளையும் அதைரியப்படுத்தி வீடுகளில் முடங்கச் செய்வர்.
 இத்தகைய ஏற்பாடுகளால் உண்மையிலேயே பேய்கள் இருப்பது போன்ற தோற்றத்தை இந்தச் சமூக விரோதிகள் ஏற்படுத்தி விடுகின்றனர். எங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம் பற்றிப் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் துணிவுடன் சென்று ஆராய்ந்தால் அங்கே சமூக விரோதக் காரியங்கள் நடப்பதைக் கண்டு கொள்ளலாம்.
 அற்பமான நோக்கங்களுக்காகக் கூட பேய்கள் பற்றிய வதந்திகள் கிளப்பப்படுவதுண்டு. ஒருவருக்குச் சொந்தமான இடத்தைக் குறைவான விலைக்கு வாங்க வேண்டும் என்று விரும்பினால் அல்லது வாடகைக்கு குடியிருப்பவரைக் காலி செய்ய விரும்பினால் பேய்களை விட எளிய வழி எதுவும் இல்லை. அந்த இடத்தில் பேய்கள் நடமாடுவதாக வதந்திகளைப் பரப்பி விட்டு, அதை உறுதிப்படுத்தும் விதமாக சில காரியங்களைச் செய்தால் விரும்பிய விலைக்கு அந்த இடத்தை வாங்கலாம். வாடகைக்கு இருப்பவரை உடனேயே காலி செய்து விடலாம். இது போன்ற அற்பமான நோக்கங்களைக் கருத்தில் கொண்டும் பேய்கள் நடமாட விடப்படுகின்றன.
 இவையெல்லாம் சில உதாரணங்களே. இது போன்ற இன்னும் அநேக காரணங்கள் பேய்களுக்குப் பின்னணியாக இருக்கின்றன.
 இனி.. பேய் பிடித்ததாகச் சொல்லப்படுபவரிடம் அதிசயங்கள் நிகழ்வது எப்படி? என்ற புதிரை விடுவிப்போம்.
 நேற்று வரை சாதாரமானவனாக இருந்த ஒருவன் பேய் பிடித்ததாக நம்பப்படும் போது அசாதாரணமானவனாக எப்படி மாறி விடுகின்றான்?
இந்தப் புதிரை நாம் விடுவித்தாக வேண்டும்.
 நாய் வேஷம் போட்டால் குறைத்துத் தான் தீர வேண்டும்.
 இந்த ஒரு வரியில் விளங்க முடியாதவர்கள் மட்டும் இனிவரும் விளக்கத்தை படிக்கலாம்.
 மற்றவர்களைப் பயமுறுத்துவதற்காகவும் அதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகவும் பேய்க் கதைகள் கட்டி விடப்படுவது போலவே வேறு சில காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக தங்களுக்கே பேய் பிடித்து விட்டதாக நடிப்பவர்களும் உண்டு. அவ்வாறு நடிப்பதால் சில காரியங்களை அவர்கள் சாதித்துக் கொள்வதும் உண்டு.
 இப்படி பேய் பிடித்து விட்டதாக நடிப்பவர்கள் அசாதாரணமானவராகவும் நடித்து தீர வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் பேய் வேஷத்தினால் அவர்கள் முழுப்பயனை அடைய முடியாது.
 இதைச் சில உதாரணங்கள் மூலம் உணர முடியும். ஒரு பெண் நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருப்பதாக (நீண்ட நாட்கள் கணவனைப் பிரிந்தவளாக இருப்பதாக) வைத்துக் கொள்வோம். இவள் இறைவனை அஞ்சி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவள் என்றால் பிரச்சனையில்லை. அவ்வாறின்றி, அன்னிய ஆடவனை விரும்பி விட்டால் என்றால் – அவனை அவள் அடைவதற்கு குடும்பத்தினர்களின் கட்டுப்பாடு தடையாக இருந்தால் அதை எவ்வாறேனும் உடைக்கவே முயற்சிப்பாள்.
 அத்தகைய பெண் சாதாரண நிலையில் நள்ளிரவில் வீட்டை விட்டுப் போய் விரும்பிய ஆடவனைச் சந்தித்து வீட்டிற்கு திரும்பினால் சமூகம் அவளைச் சும்மா விடாது. இந்தத் தடையை உடைப்பதற்கு அவள் பேயாக மாற வேண்டும். பானை சட்டிகளை உடைக்க வேண்டும். வாயில் வந்ததை உளற வேண்டும். நமக்குத் தெரியாத விஷயங்களைக் கற்பனை செய்து மறைவான செய்திகளைக் கூறுவதாக அவிழ்த்து விட வேண்டும். வேறு மொழி பேசுகிறாளோ என்று மற்றவர்கள் கருதும் அளவுக்கு வாயில் வந்தவாறு உளற வேண்டும். இதையெல்லாம் செய்துவிட்டு அவள் நள்ளிரவில் எழுந்து வெளியே சென்று விரும்பிய ஆடவனைச் சந்தித்து விட்டுத் திரும்பினால் சமூகம் அவளது நிலைக்காகப் பரிதாபப்படும். இதனால் தான் அசாதாரணமானவளாக அவள் ஆகி விடுகின்றாள்.
 இது ஒரு உதாரணமே, வேறு பல நோக்கங்களுக்காகவும் இது போல் வேஷம் கட்ட வேண்டிய நிலையில் பலர் இருக்கின்றனர். பெருமளவு கடன்பட்டவன் கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்பிக்கவும், விரைவிலேயே தனக்குத் திருமணம் செய்யும் முடிவுக்குப் பெற்றோர்களைக் கொண்டு வரவும், இன்ன பிற நோக்கங்களுக்காகவும் இப்படி நாடகமாடுவதுண்டு.
 அவர்கள் அசாதாரணமானவர்களாகக் காட்சி தருவது நடிப்புத் தான் என்பதில் ஐயம் தேவையில்லை. இதற்குச் சில சான்றுகளையும் அறிந்து கொள்வோம்.
 இலங்கையில் ஒருவர் – மலையாள மொழி அறியாத ஒருவர் – பேய் பிடித்தவுடன் மலையாளம் பேசுவதாக மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர். அவரைச் சோதிப்பதற்காக டாக்டர் கோவூர் என்பவர் செல்கிறார். இவரது தாய்மொழி  மலையாளம். இவர் சென்று அவர் பேசும் மலையாள மொழியைக் கேட்ட போது அதில் ஒரு வார்த்தையும் மலையாளச் சொல்லாக இருக்கவில்லை. வெறும் உளறலைத் தவிர வேறு இல்லை. (பார்க்க: டாக்டர் கோவூரின் மனக்கோலம்)
 பேய் பிடித்ததாக நம்பப்படுபவன் மலையாளம் பேசுகிறான். அரபியில் பேசுகிறான் என்றெல்லாம் முடிவு செய்கின்ற மக்களுக்கு அந்த மொழிகள் தெரியாது. தாங்கள் மொழி அல்லாத வேறு எந்த மொழியிலும் சேராத உளறல்களைக் கேட்டு அதற்கு ஒரு பெயரைச் சூட்டி விடுகிறார்கள் இது தான் உண்மை.
 ‘மாயம்மா என்றொரு பெண். இளம் விதவையான அவளுக்குப் பேய் பிடித்துள்ளது என்று ஊரே அனுதாபம் காட்டுகின்றது. சில இளைஞர்கள் நள்ளிரவில் அவள் பேயாக (?) வெளியே வரும் போது பின்தொடர்ந்து சென்றால் ஊருக்கு ஒதுக்குப் புறமாக மற்றொரு ஆடவனுடன் அவள்! (ஜுனியர் விகடனில் கி. ராஜ் நாராயணனின் கரிசல் காட்டுக் கடுதாசி)
 ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிக்க அவளுக்கு மொட்டை அடிக்க முற்பட்ட போது பேய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. (சில மாதங்களுக்கு முந்தைய மறுமலர்ச்சி)
 எந்த நோக்கத்திற்காக பேய் வேஷம் போடுகிறாளோ அதற்கு அழகிய  கூந்தல் வேண்டும். மொட்டை அடித்தால் எவரும் சீண்ட மாட்டார்கள். அதனால் தான் பேய் ஓடிவிடுகின்றது.
 இது நடிப்புத் தான் என்பதற்கும் – பேய்கள் கிடையாது என்பதற்கும் மேலும் சில அறிவுப்பூர்வமான சான்றுகளையும் அறிந்து கொள்வோம்.
 இறந்தவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்பது உண்மையானால் பேய்கள் உலகளாவிய ஒரு பிரச்சனையாக இருக்க வேண்டும். எங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கின்றார்களோ – எங்கெல்லாம் அடக்கம் செய்யப்படுகின்றார்களோ – எங்கெல்லாம் எரிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம் இருந்தாக வேண்டும். ஆனால் மூடநம்பிக்கை மலிந்துள்ள இந்தியா போன்ற நாடுகளைத் தவிர உலகின் பல பகுதிகளில் பேய்களுக்கு அறவே இடமில்லை.
 கம்யூனிஸத்தின் பிடி இருக்கமாக உள்ள நாடுகளில் பட்டிதொட்டிகள் முதல் பெருநகரம் வரை எவருக்கும் பேய் பிடிப்பது கிடையாது. சவூதி அரேபியா போன்ற பகுதிகளிலும் பேய்களைக் காண முடிவதில்லை. இந்தியாவில் கூட மிகப்பெரும் நகரங்களில் பேய்களின் அதிகாரம் செல்லுபடியாவதில்லை.
 அங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கத் தான் செய்கின்றனர். பேய்களின் உற்பத்தித் தலங்களாகக் கருதப்படும் சுடுகாடுகளும், கல்லறைகளும் இருக்கத் தான் செய்கின்றன. பேய்களுக்குரிய எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருந்தும் அங்கெல்லாம் பேய்கள் இல்லாமலிருப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
 அங்குள்ள மக்களுக்கு பேய்கள் பற்றிய நம்பிக்கை இல்லாததால் பேய் வேஷம் அங்கே எடுபடுவதில்லை. பேய் வேஷம் போட்டு எதையும் அங்கே சாதிக்க முடிவதில்லை என்பதைத் தவிர இதற்கு வேறு காரணம் எதுவுமில்லை.
 சட்டதிட்டங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லாத ஐரோப்பிய நாடுகளிலும் பேய்களுக்கு அவ்வளவு இடமில்லை. காரணம் அங்குள்ளவர்கள் எத்தகைய தகாத உறவிலும் பேய் வேஷம் போடாமலேயே ஈடுபட முடியும். ஒரு பெண் விரும்பிய ஆடவனும் விரும்பிய நேரத்திலும் சுற்ற முடியும். அதை அந்தச் சமூகம் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. பேய் வேஷம் போடாமலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள வழியிருப்பதால் அங்குள்ளவர்கள் பேய்களின் துணையை நாடுவதில்லை; அதற்கு அவசியமும் இல்லை.
 இறந்தவர்களின் ஆவிகளைப் பேய்கள் எனும் அடிப்படையில் பார்க்கும் போது பேய்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 500 கோடி என்றால் இன்று மேலும் 100 கோடி அதிகமாகியிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பலநூறு பேய்கள் அதிகமாகும் போது அவற்றின் அட்டகாசங்களும் அதிகமாகி இருக்க வேண்டும்.
 அவ்வாறு பேய்களின் அட்டகாசங்கள் அதிகமாகியுள்ளனவா? என்றால் நிச்சயமாக இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பேய் பிடித்தவர்களின் எண்ணிக்கையை விட இன்று பேய் பிடித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ குறைந்துள்ளது. இதுவும் பேய்கள் இல்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.
 பேய்கள் மனிதனை விட அதிக வல்லமை கொண்டவை. ஒரே அடியில் அவை மனிதனை வீழ்த்தி விடக்கூடிய ஆற்றல் கொண்டவை என்றெல்லாம் பேய் நம்பிக்கையாளர்கள் எண்ணுகிறார்கள்.
 இவ்வளவு வல்லமை மிக்க பேய்கள் ஒரு மனிதன் தனியாகச் செல்லும் போது பிடித்துக் கொண்டதாகத் தான் பேசப்படுகின்றதே அன்றி கூட்டமாக இருப்பவர்களைப் பிடித்ததாக எங்கேயும் பேசப்படுவதில்லை. ஐந்தாறு பேர் ஒரு சுடுகாட்டை அல்லது கல்லறையைக் கடந்து சென்றாலும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பேய்கள் இவர்களை அண்டுவதில்லை என்பதையும் நாம் கேள்விப்படுகிறோம். பேய்கள் உண்மையிலே இருக்குமானால் இவர்களை ஏன் தாக்குவதில்லை?
 இருட்டில் மாத்திரம் ஆதிக்கம் செலுத்தும் பேய்கள் வெளிச்சத்தில் வருவதில்லையே அது ஏன்? இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் ஏதும் கிடையாது. இருட்டாக இருக்கும் போது எதையாவது பார்த்து விட்டு பேய் என்று மனிதன் நினைத்துக் கொள்கின்றான். நல்ல வெளிச்சத்தில் ஒவ்வொரு பொருளும் அதன் உண்மையான வடிவத்தில் காட்சி அளிப்பதால் வெளிச்சத்தில் பேய்களை யாரும் பார்க்க முடியவில்லை.
 இது போலவே தனியாக ஒரு பெண் செல்லும் போது தைரியம் குறைந்த நிலையில் இருக்கிறாள். அப்போது அவள் கண்களுக்குக் கற்பனைத் தோற்றம் தெரிகிறது. ஐந்தாறு பேருடன் செல்லும் போது ஒருவளுக்கு மட்டும் கற்பனையாக ஏதும் தோன்றினாலும் மற்றவர்கள் அப்படி எதுவும் தோன்றவில்லையே என்று கூறி விடுகிறார்கள். உண்மையாக இருந்தால் ஐந்து பேருக்கும் தென்பட வேண்டும். பொய்யாக இருப்பதால் தான் ஒருத்திக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறது என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.
 பேய்கள் என்று ஆட்டம் போடுபவர்களில் 90 சதவிகிதம் பேர் நடிப்பவர்களே, அதன் மூலம் எதையோ சாதித்துக் கொள்ள விரும்புபவர்களே என்பதை இதன் மூலம் அறியலாம்.
 இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் பலருக்கும் உண்டு. எவ்வளவோ மருத்துவம் செய்தும் குணமடையாத இத்தகையோர் ஒரு சாமியாரின் விபூதியைக் கண்டவுடன் – வேப்பிலையைக் கண்டவுடன் ஓம் ரீம் என்ற மந்திரத்தைக் (?) கேட்டவுடன் எவ்வாறு அடங்கி விடுகின்றனர்?
 மவ்லவிகள், தங்கள்மார்கள் ஆகியோர் மந்திரித்தவுடன் – தண்ணீர் ஓதி முகத்தில் தெளித்தவுடன் அல்லது துணியில் எதையாவது எழுதி அதை எரித்து அந்தப் புகையை முகரச் செய்தவுடன் ‘விட்டுவிடு இனி வரமாட்டேன் என்று கூறிக் கொண்டு பேய்கள் ஓடுகின்றனவே, இது எப்படி? ஒரு பாதிரியாரின் தாயத்தை அணிந்தவுடன் அலறிக் கொண்டு பேய்கள் ஓட்டமெடுப்பது எவ்வாறு? இது தான் அந்த நியாயமான சந்தேகம்.
 பேய்கள் பிடித்துள்ளதாக நடிப்பவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் அலறிக் கொண்டு ஓடுவதாகவும் நடித்தாக வேண்டும். மந்திரத்துக்கு அடங்காவிட்டால் பேய் பிடித்ததை மற்றவர்கள் நம்ப மாட்டார்கள்.
 இந்தச் சாமியார்களோ, பாதிரிகளோ அல்லது தங்கள்மார்களோ ஜபிக்கும் போது பேய் பிடித்தவர்களிடம் எந்த விளைவும் ஏற்படவில்லையென்றால் பிடித்திருப்பது பேயல்ல என்று மக்கள் நினைப்பதுடன் பேயோட்டிகளே “பேயில்லை நோய்தான் என்று சான்று வழங்கி விடுவார்கள். அதன் பிறகு பேய் வேஷம் போட்டதனால் எதிர்பார்த்த பலனை அடைய முடியாது. பேயோட்டிகளே ‘பேய் பிடித்துள்ளது என்று சர்டிபிகேட் வழங்குபவர்களாக உள்ளதால் அவர்களது ஜபத்திற்கு ஏதேனும் எதிர் விளைவைக் காட்டியாக வேண்டும்.
 இதனால் தான் எல்லா மந்திரவாதிகளுக்கும் (?) பேய்கள் அடிபணிகின்றன.
 இதை யார் வேண்டுமானாலும் சோதித்து அறிய முடியும். பேய் பிடித்ததாக நம்பப்படுபவனின் முன்னால் பேயோட்டி போல் சென்று அமர்ந்து கொண்டு பேயோட்டும் திறமை உங்களுக்கு இருப்பதாக நம்பச் செய்யுங்கள். அதன் பிறகு உங்கள் வாய்க்குள்ளாக ‘அறிவு கெட்ட மடையா! யாரை ஏமாற்றுகிறாய்....! என்பது போல் எதையாவது கூறி ஓதுவது போல் பாவனை செய்து தண்ணீரில் ஊதித் தெளித்தால் அப்போதும் அந்தப் பேயிடம் எதிர் விளைவைக் காணலாம்.
 பேய் பிடித்ததாகக் கூறுவது எப்படி நடிப்பாக உள்ளதோ, மந்திரத்தைக் கேட்டதும் அது விலகுவதாக அலறுவதும் நடிப்புத் தான்.
 இது வரை நாம் எடுத்து வைத்த சான்றுகள் பேய்கள் கிடையாது என்பதையும் பேய் பிடிப்பதும் அவற்றின் நடமாட்டமும் திட்டமிட்ட நாடகமே என்பதையும் நிரூபிக்கப் போதுமானவையாக உள்ளன. ஆயினும் பேய்கள் இருக்குமோ என்ற தடுமாற்றத்தை ஏற்படுத்தும் இன்னும் சில ஐயங்களும் உள்ளன.
 அவற்றையும் அப்புறப்படுத்தாத வரை பேய் நம்பிக்கையை ஒழிக்க முடியாது. அத்தகைய ஐயங்களையும் அது பற்றிய தெளிவையும் காண்போம்.
 பேய் பிடித்ததாக நம்பப்படுபவர் அதற்கு முன்னால் அவர் அறிந்திராத மறைவான செய்திகளையெல்லாம் அறிவிக்கக்கூடிய நிலையை நாம் காண்கிறோம்.
 உதாரணமாக இருபத்தி ஐந்து வயதுடைய இளைஞனுக்கு பேய் பிடித்ததாக வைத்துக் கொள்வோம். அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மரணித்தவரின் ஆவி வந்து இவனைப் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம்.
 இவனுக்குப் பேய் பிடிப்பதற்கு முன்னால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை தெரியாமலிருந்து இப்போது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பேய் பிடித்துக் கொண்டவுடன் மளமளவென்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளை அவன் கூற ஆரம்பித்து விடுவதைக் காண்கிறோம்.
 இது போலவே மதுரையில் உள்ள ஒருவனை நாகர்கோவிலில் உள்ள பேய் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது இந்தப் பேய் பிடித்தவன் நாகர்கோவிலில் நடந்த விபரங்களைக் கூறுகிறான்.
 பேய் பிடிப்பது என்பது ஒரு நாடகம் என்றால் இந்த அதிசய வல்லமை எப்படி அவனுக்கு ஏற்படுகின்றது? என்று பேய் நம்பிக்கையாளர்கள் வினா எழுப்புகின்றனர். இப்படி ஒரு நம்பிக்கை அவர்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் போது எந்த ஆதாரங்களும் அவர்களை அசைத்து விட முடியாது. எனவே இதன் உண்மை நிலையை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவோம். பேய் பிடித்தவரிடம் இத்தகைய ஆற்றல் ஏற்பட்டு விடுவது போல தோன்றுவது பொய்த் தோற்றமே தவிர உண்மை அல்ல. இதைப் பலரும் உணர்வதில்லை.
 25 வயதுடைய இளைஞன் பேய் பிடித்ததும் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகளைக் கூறுவதும் நடிப்புத் தான். அவன் கூறுவது போல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஏதும் நடந்தே இராது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்ததை விசாரித்தறிய பின்னோக்கிச் செல்ல முடியாது என்பதாலும் தனது சாயம் வெளுக்காது என்ற தைரியத்தாலும் இவன் உளறிக் கொட்டுகிறான். அவன் மறைவான சங்கதிகளைக் கூறுகிறான் என்று பேய் ஆதரவாளர்கள் முடிவு செய்து விடுகின்றனர்.
 கடந்த காலம் பற்றி இப்படி கண்டதையும் கூறும் வசதியை பேய் பிடித்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அவர்கள் உளறும் போது மட்டுமே மக்கள் அதை நம்புவார்கள். பேய் பிடிக்காதவர்கள் கடந்த காலம் பற்றி கூறினால் எவருமே நம்ப மாட்டார்கள்.
 பேய் பிடித்தவர்களிடம் வந்துள்ள பேய்கள் கடந்த காலத்தை அறிந்துள்ளன; பேய்கள் அவற்றை நமக்கு அறிவிக்கின்றன என்ற நம்பிக்கை சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளதால் கடந்த காலம் பற்றி எதை வேண்டுமானாலும் கூற முடிகின்றது. அதை நம்புவதற்கும் ஆட்கள் உள்ளனர்.
 கடந்த காலம் பற்றியெல்லாம் அறியும் ஆற்றல் பேய் பிடித்தவர்களுக்கு எற்படுவது உண்மையானால் நிகழ் காலத்தை அறிவது அதை விட எளிதானதாக இருக்க வேண்டுமல்லவா? நிகழ்காலம் பற்றி எதையேனும் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் விடையளிக்க மாட்டார்கள்.
 உங்கள் கைகளில் எதையாவது மறைத்து வைத்துக் கொண்டு இதில் என்ன உள்ளது? என்று கேட்டால் அவர்களால் அதைக் கூற முடியாமல் போவது ஏன்? இதைத் தான் நாம் சிந்திக்கத் தவறி விடுகிறோம்.
 நமது கையில் மறைந்திருப்பதைப் பற்றி அவர் வாயில் வந்தவாறு விட்டு அடிக்க முடியாது. ஏனெனில் உடனேயே நாம் அவரது கூற்று உண்மையா? பொய்யா? என்பதைக் கண்டுபிடித்து விடுவோம்.
 அது போல் பத்து நிமிடத்துக்குப் பின்னால் என்ன ஏற்படும்? என்ற விஷயத்தைப் பற்றி பேய் பிடித்தவனிடம் கேளுங்கள். அதற்கும் விடை வராது.
 ஒரு நாளைக்கு முன் அல்லது ஐந்தாறு நாட்களுக்கு முன் அல்லது சில மாதங்களுக்கு முன் நடந்தவை பற்றி மூச்சு விடுவதில்லை. எனெனில் இதைப் பற்றி விசாரித்தறிந்து பேய் பொய் கூறுகிறது என்பதை நாம் கண்டுபிடித்து விடுவோம்.
 சென்ற காலத்தில் (எந்தச் சென்ற காலம் பற்றி விசாரித்தறிய முடியாதோ) எது நடக்கும் போது பலரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லையோ அது போன்ற காலம் பற்றியும் – அது போன்ற சம்பவம் பற்றியும் மட்டுமே பேய்கள் கூறுவது ஏன்? இதைச் சிந்தித்தால் உண்மை விளங்கும்.
 பேய் பிடித்ததாக நடிப்பவர்கள் திட்டமிட்டு திறமையாக நடிப்பதால் ஆற்றல் மறைந்து கிடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இது தான் உண்மையாகும்.
 இதை இன்னும் விரிவாக அறிந்து கொள்ள இன்னொரு விதத்தில் நாம் சோதித்துப் பார்க்கலாம்.
 அதாவது ஒரு மனிதன் தன் கண் முன்னே நடப்பதை மட்டுமே அறிய முடியும். அவனது முதுகுக்குப் பின்னால் நடக்கும் எதையும் அவனால் அறிய முடியாது. இது மனிதனின் நிலை. ஆனால் பேய்கள் உருவமற்றவை. அவற்றுக்கு முதுகுப்புறம் முன்புறம் பின்புறம் எல்லாம் கிடையாது. இவ்வாறிருக்க பேய் பிடித்தவரின் முதுகுக்குப் பின்னால் இரண்டு விரல்களைக் காட்டி இது எத்தனை விரல்கள்? என்று கேட்டால் கூட சொல்ல முடிவதில்லை. பேய் பிடித்தவரின் கண்களையும் கட்டி விட்டு அருகில் நடப்பதைக் கேட்டால் அதையும் சொல்ல முடிவதில்லை.
 பார்ப்பதற்கு மனிதனுக்குத் தான் கண்கள் வேண்டுமே தவிர பேய்களுக்குக் கண்கள் தேவையில்லையே. அப்படியானால் ஏன்  பேய்களால் இதைச் சொல்ல முடிவதில்லை?
 இந்த இடத்தல் தான் இதுவொரு நாடகம் என்பது தெளிவாகின்றது.
 பேய் பிடித்த மனிதனது கண்களும் அவனது காதுகளும் கட்டப்பட்டதும் பேய்களுக்கு பார்க்கவோ கேட்கவோ முடியாமல் போவதிலிருந்து பார்ப்பதும் கேட்பதும் பேசுவதும் இந்த மனிதன் தான்; பேய் கிடையாது என்பதை நிரூபிக்கின்றது.
 பேய் பிடித்ததாகக் கூறுவது நடிப்பின் ஒரு காட்சி என்றால் மறைவான கடந்த கால நிகழ்ச்சி பற்றிக் கூறுவது நடிப்பின் மற்றொரு காட்சி என்பதைத் தவிர வேறில்லை.
 இது திட்டமிட்ட நடிப்புத் தான் என்பதில் இன்னும் சந்தேகம் இருந்தால் இன்னொரு சோதனையின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடியும்.
 உயிரோடு இருக்கும் மனிதனிடம் பேய்கள் வந்து விடுமானால் ஏற்கனவே பெற்றிருந்த வல்லமையை விட கூடுதல் வல்லமை பெறுகின்றான் என்பது பேய் நம்பிக்கையாளரின் முடிவு.
 பேய் பிடித்ததாக நம்பப்படும் நிராயுதபாணியான ஒருவனிடம் ஒரு கத்தியை அல்லது கழியைக் காட்டி அவனை அடிக்க முயன்றால் அவன் அலறுவதைக் காண்கிறோம். சாதாரண மனிதனை விட சக்தி வாய்ந்த பேய் அவனிடம் குடி கொண்டிருப்பது உண்மையானால் அவன் என்ன செய்ய வேண்டும்? இந்த ஆயுதங்களைக் கண்ட பின்பும் அஞ்சாமல் எதிர்க்க வேண்டும். நம்மை வெற்றி கொள்ள வேண்டும். அது தான் முடியாவிட்டாலும் அந்த மனிதனிடமே உள்ள பேய் அவனிடமிருந்து பாய்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும். இப்படியெல்லாம் எங்கேயும் நடந்ததில்லை. அப்படியானால் மிரள்வதும் அரள்வதும் அந்த மனிதன் தானே தவிர பேயில்லை என்பது தெளிவாகின்றது அல்லவா!
 சில பேர் மிரளாமலும் இருப்பார்கள். எனெனில் மிரட்டுபவர் தன்னை அடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாகத் தெரியும் போது தான் இந்த நிலை. மிரட்டக் கூடியவர் நிச்சயம் அடிப்பார் என்று தெரிந்தால் அப்போது நிச்சயம் மிரள்வார். சிலர் மிரட்டும் போது மிரளாமல் இருப்பதும், வேறு சிலர் மிரட்டும் போது மிரள்வதும் அதனால் தான்.
 பேய் நம்பிக்கையாளரின் இந்தச் சந்தேகம் அடிப்படையில்லாததாக இருப்பதும் உறுதியாகின்றது அல்லவா! இவர்களின் மற்றொரு ஐயத்தையும் காண்போம்.
 நல்லடியார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள தர்ஹாக்களில் பேய் பிடித்த எத்தனையோ நபர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். சங்கிலியால் பூட்டப்படுகின்றனர். இவ்வாறு தர்ஹாக்களைத் தஞ்சமடைந்தவர்களிடம் உள்ள பேய்களை அந்த மகான்கள் வியக்கத்தக்க விதத்தில் விரட்டியடிக்கின்றனர். ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் இதை நாம் காண முடிகின்றதே என்பது சிலரது ஐயம். இதுவும் ஒரு நாடகம் தான். ஏனைய ஐயங்களைப் போலவே இதுவும் அடிப்படையில்லாததாகும். இது பற்றி நாம் விரிவாகவே அலசுவோம்.
 தர்ஹாக்களில் நிரப்பப்படும் பேய் பிடித்தவர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.
 ஒரு சாரார் உண்மையாகவே பைத்தியம் பிடித்தவர்கள். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இவர்கள் இவர்களது உறவினர்களின் அறியாமையினால் பேய்கள் என்று நம்ப வைக்கப்பட்டு தர்ஹாக்களுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள்.
 உண்மையாகவே இவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளதால் தர்ஹாக்களில் இவர்கள் நிவாரணம் பெற முடிவதில்லை. ஒரு தர்ஹாவிலிருந்து மறு தர்ஹா என்று டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு தமிழகத்தின் அனைத்து தர்ஹாக்களுக்கும் விசிட் செய்வார்கள். முடிவில் நம்பிக்கையிழந்து விதியை நொந்து கொண்டு பைத்தியங்களாகவே விடப்படுவர். பாவம் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்!
 ஆரம்பத்திலேயே முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் இவர்கள் முழு அளவில் ஆரோக்கியம் பெறும் அளவுக்கு மருத்துவத் துறையில் இன்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூடநம்பிக்கை இவர்களது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டது.
 ஏர்வாடி தர்ஹாவைச் சுற்றியுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்பட்ட பல மனநோயாளிகள் தமிழக அரசால் மீட்கப்பட்டு உரிய சிகிச்சையின் மூலம் குணமடைந்ததை சமீபத்தில் நாம் கண்டோம்.
 இரண்டாம் சாரார் நாம் முன்னரே விளக்கிய பிரகாரம் எதேனும் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பேய்களாக நடிப்பவர்கள். இவர்கள் தங்களின் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் காலம் வரை நடித்து விட்டு காரியம் கை கூடிய பிறகு பேய் வேஷத்தைக் களைப்பவர்கள். இவ்வாறு இவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு காலகட்டத்தில் வேஷத்தைக் களையும் போது அதன் பெருமை தர்ஹாவுக்குச் சேர்ந்து விடுகின்றது.
 உண்மையில் பைத்தியம் பிடித்தவர்களும் பேய் பிடித்ததாக நடிப்பவர்களும் ஆகிய இந்த இரு சாராரும் பாதிக்கும் குறைவானவர்களே. மக்களை தர்ஹாவின் பால் ஈர்ப்பதற்காக செட்டப் செய்யப்பட்டவர்கள் மறுபாதியினர்.
 ஏறத்தாழ கூலிக்கு மாறடிக்கும் கூட்டம் போன்றவர்கள் இவர்கள். இப்படி வெள்ளி, திங்கள் இரவுகளில் பேய்கள் பிடித்ததாக நடிப்பதற்கும் தலையை விரித்துப் போட்டு ஆடுவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் உண்டு. சுவையான உணவும் உண்டு.
 “பேய் பிடித்தவர்கள் எல்லாம் இங்கே தான் வந்து குழுமுகின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி ஏனையோரை வரவழைக்கவும் உண்டியலை நிரப்பிக் கொள்ளவும் தர்ஹா பூசாரிகள் நடத்தும் நாடகம் இது. இது வெறும் அனுமானம் இல்லை, நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.        
 ஒவ்வொரு வெள்ளி இரவிலும் ஏனைய நாட்களை விட பேயாட்டம் போடுவோர் அதிக அளவில் காணப்படுவர். வெள்ளிக்கிழமை அவர்களில் பெரும் பகுதியினர் காணாமல் போய் விடுவர். சொல்லி வைத்தாற் போல் வெள்ளி இரவுகளில் மட்டும் இப்படி பேயாடிகள் பெருகி ஏனைய நாட்களில் குறைவதிலிருந்து இது திட்டமிட்ட ஏற்பாடு என்பதை உணரலாம். தொடர்ந்து சில நாட்கள் தர்ஹாக்களை நோட்டமிட்டால் இதை எவரும் அறியலாம்.
 வெள்ளி இரவுகளில் தான் மக்கள் அதிக அளவில் வருவார்கள். அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளியன்று மட்டும் இந்த விசேஷ ஏற்பாடு செய்யப்படுகின்றது.
 வெள்ளிக்கிழமையில் கூட எல்லா நேரங்களிலும் பேய்களின் ஆட்டங்கள் இருப்பதில்லை. எந்த நேரத்தில் மக்கள் திரளாகக் குழுமுகின்றார்களோ அந்த மாலை நேரங்களில் மட்டுமே இந்த ஆட்டம் உச்சக் கட்டத்தில் உள்ளது. மக்கள் கூட்டம் குறைய ஆரம்பித்ததும் பேயாட்டம் போடுவோரும் குறைய ஆரம்பித்து விடுகின்றனர். உண்மையிலேயே பேய் பிடித்து இயல்பாகவே அவர்கள் ஆட்டம் போடுகிறார்கள் என்றால் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் தர்ஹாக்கள் பேயாட்டம் போடுவோரால் நிரம்பி வழிய வேண்டும்.
 குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கணிசமாக பேயாடிகள் அதிகரிப்பது செட்டப் என்பதை நிரூபிக்கப் போதுமாகும்.
 மேலும் தொடர்ந்து சில வாரங்கள் இவர்களை நாம் கண்காணித்து வந்தால் குறிப்பிட்ட அதே முகங்கள் அதே கோலத்தில் தென்படுவார்கள். இதுவும் செட்டப் என்பதற்கு சான்றாக உள்ளது. எவ்வாறெனில் வெள்ளி இரவு பேயாடி விட்டு அன்று காலையிலேயே குணம் பெற்று (?) வீடு திரும்பியவர்கள் ஒவ்வொரு வெள்ளி இரவும் (வெள்ளி இரவு மட்டும்) பேய் பிடித்தவர்களாகக் காட்சி தருகின்றார்கள். ஏனைய நாட்களில் அவர்கள் காணப்படுவது கிடையாது. இது தர்ஹா பூசாரிகளின் திட்டமிட்ட ஏற்பாடே என்பது ஐயமில்லை.
 இது போன்ற ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே தர்ஹாக்களில் பேய்கள் நடமாடுகின்றன, விலகி ஓடுகின்றன.
 ஏற்கனவே நாம் எடுத்துக்காட்டியுள்ள குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து இறந்தவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதைக் கண்டோம். மனிதன் இறந்து விட்டால் இவ்வுலகத்துடன் அவனுக்கு இருந்த எல்லா உறவுகளும் முடிவுக்கு விடுகின்றன என்பதையும் கண்டோம். தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் பேய்களை விரட்டுவார்கள் என்ற நம்பிக்கை இந்தச் சான்றுகளுக்கு முரணானவை என்பதையும் நாம் கவனிக்கும் போது தர்ஹாக்களில் பேய் பிடித்தவர்கள் குழுமுகிறார்கள் என்பதும் அதை அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்கள் விரட்டுகிறார்கள் என்பதும் ஆதாரம் அற்றவை என்பது மேலும் உறுதியாகின்றது. பைத்தியமாகி விட்டவர்கள் பைத்தியமாக நடிப்பவர்கள் தவிர மற்றொரு வகையினரையும் மக்கள் பேய் பிடித்தவர்கள் என எண்ணுகின்றனர்.
 குடும்பத்தில் – சமுதாயத்தில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டவர்கள் அதை எண்ணியே ஹிஸ்டீரியா எனும் மனநோய்க்கு ஆளாகி விடுவர். இதன் மூலம் பிறரைத் தங்கள் பால் ஈர்க்க முயல்வர். தன்னை இன்னொருவராகப் பாவனை செய்ய முற்படுவர்.
 அளவுக்கதிகமான கற்பனைகளில் பலவாறான விளைவுகளுக்கு ஆளாகின்றனர். ஒரு கட்டத்தில் இன்னொருவராக தன்னைப் பார்க்கத் தொடங்குவர்.
 தன்னை யாரும் கவனிப்பதில்லையே என்ற விரக்தியில் எதை எதையோ செய்ய ஆரம்பிப்பார்கள்.
 தனக்கு சாமி வந்து விட்டது, அவ்லியா இறங்கி விட்டார், பேய் பிடித்து விட்டது என்றெல்லாம் இவர்கள் கருதத் துவங்கும் போது பிறரால் இவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அக்கறை செலுத்தப்படுகிறார்கள்.
 இவர்கள் வேண்டும் என இப்படிச் செய்யாவிட்டாலும் அவர்களையுமறியாமல் இப்படியெல்லாம் நடக்கத் துவங்கி விடுகின்றனர். இவர்களுக்கு ஹிஸ்டீரியா எனும் மனநோய் தான் ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்தால் இவர்களை எளிதில் குணப்படுத்தி விடலாம்.
 இவர்கள் பேயாட்டம் போடும் போதும் சாமி வந்துவிட்டதாக கூறும் போதும் அவ்லியா மேலாடுவதாக்க் கூறும் போதும் எவருமே அதைக் கண்டு கொள்ளக் கூடாது. அந்தச் சமயத்தில் அதிகமாக அவர்களைக் கவனிக்கக் கூடாது. இப்படி நடந்து கொண்டால் இரண்டொரு நாளில் இந்த நோய் குணமாகி விடும்.
 பிறரது கவனத்தையும் கவனிப்பையும் பெறுவதற்காக ஏற்பட்ட மனநோய் தானா? என்பதை முதலில் மனநோய் மருத்துவரிடம் காட்டி உறுதி செய்து கொண்ட பின், மேற்கூறிய முறையில் அவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
 முற்றிப் போன பைத்தியம் என்றால் அதற்கான முகாம்களில் வைத்து சிறப்பு வைத்தியம் செய்ய வேண்டும்.
 நடிக்கிறார்கள் என்றால் அதற்கான காரணத்தைக் களைய முயல்வதுடன் உரிய பரிகாரமும் செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டால் பேய்களுக்கு அறவே இடம் இராது.
 ஒருவனுக்கு வந்துள்ள பேய் எந்த வகையானது (?) என்பதை தக்கவர்களிடம் சென்று உறுதி செய்வது மிகவும் அவசியம். அதன் பின்னர் சிகிச்சையில் இறங்க வேண்டும்.
 பேய் – பிசாசுகள் என்று நம்பி ஈமானையும் நிம்மதியையும் பகுத்தறிவையும் பழி கொடுப்பதிலிருந்து வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக.        ​      
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
‘பெண் என்றால் பேயும் இரங்கும்
‘நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும்
 என்றெல்லாம் தமிழகத்தில் வழங்கும் பழமொழிகள், தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
 உலகின் பல பகுதிகளில் பேய்களின் நடமாட்டம் உண்டு எனினும் தமிழகத்தில் இவற்றின் நடமாட்டம் மிக அதிகம். எண்ணிலடங்காத பேய்கள் உலா வருவதால் அவற்றின் பெயர்களும் தன்மைகளும் மிகத்துல்லியமாக வித்தியாசப்பட்டுள்ளதை தமிழகத்தில் காண முடியும்.
 நள்ளிரவில் கதவைத் தட்டும் பேய்களும் உள்ளன. வீடுகளில் கல்லெறிந்து விட்டு மாயமாய் மறைந்திடும் பேய்களும் உள்ளன. பழிவாங்கும் பேய்கள்; இரத்தம் குடிக்கும் பேய்கள்இளைஞர்களை மாத்திரமே ‘தப்பு செய்வதற்காக அழைக்கும் மோகினிப் பேய்கள், வேண்டியவர்களுக்கு உதவி செய்யும் பேய்கள் என்றெல்லாம் பேய்களில் பல வகைகள் உள்ளன. இல்லறத்தில் தோல்வியடைந்து இலக்கின்றி அலையும் பேய்களும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் மீது மேலாடுகின்ற மகாசக்தி  படைத்த பேய்களும் உள்ளன.
 பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என்பது போன்ற செல்லப் பெயர்களும் பேய்களுக்கு உள்ளன. பேய்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வெல்வாக்குக்கு இவை சான்றுகள்.
 பேய் வீடு, பேய் மாளிகை என்றெல்லாம் பேய்களைக் கதாநாயகர்களாக்கி பி.டி. சாமி போன்றவர்கள் தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடிகின்றதென்றால் பேய் சமாச்சாரங்களை வெளியிட்டு தமிழகப் பத்திரிகைகள் பல சமூகத் தொண்டாற்ற (?) முடிகிறது என்றால் பேய்களின் ஆதிக்கத்தை அளவிட வேறு அளவுகோல் எதுவும் தேவையில்லை.
“அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார் என்று நெஞ்சு பொறுக்காமல் சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை.
 மற்றவர்கள் பேய்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நம்பிவிட்டுப் போகட்டும்! முஸ்லிம்கள் இது பற்றி எத்தகைய முடிவுக்கு வரவேண்டும் என்பதையும் பேய்களை நம்புவதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் அவற்றை மறுப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களையும் திருக்குர்ஆன் வெளிச்சத்தில், திருநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் துணையுடன் ஆராய்வோம்.
 மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் “பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் ‘இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.
 இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம். அதன் பிறகு பேய்களின் ஆதரவாளர்கள் எழுப்பும் வினாக்களையும் ஆராய்வோம்.
 உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும்மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 39:42)
 பேய்-பிசாசுகள்  கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் (தனது கைவசத்தில்) வைத்திருப்பதாக தெளிவாகவே இங்கே இறைவன் குறிப்பிடுகிறான்.  


மாமனிதர்


                                                                                 

                                                                                 
நூலின் பெயர் : மாமனிதர் நபிகள் நாயகம்

ஆசிரியர் :       பீ.ஜைனுல் ஆபிதீன்

சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.
இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து 'த ஹன்ட்ரட்' (பட்ங் ஐன்ய்க்ழ்ங்க்) என்ற நூலை மைக்கேல் ஹார்ட் (ஙண்ஸ்ரீட்ங்ப் ஐங்ஹழ்ற்) எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது 'நூறு பேர்' என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.
மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அந்த நூல் அவர் குறிப்பிடுகிறார்.
மைக்கேல் ஹார்ட் கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட 'மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதடம் நபிகள் நாயகத்துக்குத் தான்' என்று குறிப்பிடுகிறார்.


                                                                                                                                                                                                     Read More

பெண்கள் உரிமை

நூலின் பெயர்: இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?


                  ஆசிரியர்   பீ.ஜைனுல் ஆபிதீன்


இந்த நூலின் ஆசிரியர் பீ. ஜைனுல் ஆபிதீன் நாடறிந்த நல்ல சிந்தனையாளர்.  சிறந்த மார்க்க அறிஞர் இதழாசிரியர்  தமிழ் நாட்டில் மறுமலர்ச்சிக்காக உழைத்து வருபவர். அதன் பொருட்டு விமர்சனக் கணைகளுக்கு ஆளாகி வருபவர்.  தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் கூர் அம்புகளை அறிவுக்கேடயத்தால் தடுத்து முனை மழுங்கச் செய்வதில் வல்லவர். அந்த வல்லமையும் சாமர்த்தியமும் இந்த நூலின் எட்டு அத்தியாயங்களிலும் எதிரொளித்து, உண்மையை பிட்டு பிட்டு வைக்கிறது.
பலதார மணத்திற்கு இஸ்லாம் ஏன் அனுமதி அளித்தது? அதற்குக் காரணம் என்ன? அந்த அனுமதி இல்லாவிட்டால் நிலைமை என்ன ஆகும்? தலாக்கின் எதார்த்தம் என்ன? ஜீவனாம்சம் இஸ்லாத்தில் இல்லையா? போன்ற கேள்விகளுக்கு நூலாசிரியர் தரும் அறிவுபூர்வமான விஷயங்கள் விழிப்புருவங்களை வியப்பால் உயர்த்துகின்றன.
குறிப்பாக இந்த நூலில் உள்ள தலாக், ஜீவனாம்சம், பர்தா ஆகிய மூன்று அத்தியாயங்களும் நம் நாட்டு தேசிய நாளேடுகளும், முற்போக்குவாதிகளும், அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை பேசுவோரும் மண்டியிட்டு அமர்ந்து, படித்துத் தெளிய வேண்டிய அத்தியாயங்கள்!
                                                       Read More

Tuesday, 5 April 2011

சிறுமிகளிடம் பாலியம் குற்றம் புரிந்த அமெரிக்க இந்து சாமியார் தலைமறை


டெக்சாஸ் மாகணத்தின் 200 ஏக்கர் இடத்தில் ஆசிரமம் வைத்து நடத்தும் 82 வயது பிரகாஷ்ஆனந்த் சரஸ்வதி என்ற “சிரி சாமிஜி” என்று அழைக்கப்படும் சாமியார் மீது இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 20 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 11 மில்லியன் டாலர் (ஏறக்குறைய 50 கோடி ரூபாய்) பிணையில் தற்போது வெளியில் உள்ளார்.
அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் தற்போது நிருபிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு நாளன வெள்ளி அன்று அவர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தலைமறைவாகியுள்ளார். மேலும் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு பிரிவிற்கும் அதிபட்ச தண்டனையாக 20 வருடம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அமெரிக்க பாஸ்போர்ட் ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-அல்மதராஸி

Sunday, 3 April 2011

1. இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு

இந்து மதம்
சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா (Encyclopedia) உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம் 74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார். ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.

ஹிந்துத்துவம் என்றால் என்ன?ஹிந்துத்துவம் என்பது ''ஹிந்து" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து என்ற பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத நம்பிக்கை விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் (1830) முஸ்லிம்களல்லாத, கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக, உள்ள பிற மக்களை ஹிந்து என அழைத்தனர்.

மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது தவறு. ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை. எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும்.

ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக் கூறுவது எனக் கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர் ''வேதாந்திகள்" ஆவர்.

இஸ்லாம்-ஒர் அறிமுகம்
''ஸலாம்" எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால் சாந்தி அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்? யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.

இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்
இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில் உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின் நிறுவனர் முஹம்மது நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை நபியுமாவார்.

இந்துமத விசுவாசத்தின் தூண்கள்
இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்துத்துவத்தின் ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையறைகளோ என்று எதுவுமில்லை. ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளை, வணக்க வழிபாடுகளை இவ்வாறு புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு கட்டுக்கோப்பான பொதுவான நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு திருப்தி அளிக்கும் செயலை சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ, கட்டாயம் செய்யவேண்டியது, அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப் போய்விடுவார் என்ற கெடுபிடியோ எதுவும் இல்லை. ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற மத சடங்கு ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார், அதனால் இவர் இந்து அல்லாதவராக ஆகிவிட்டார் என கூறவியலாது. இருப்பினும் இந்துக்களிடம் பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம் இந்துக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.

இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை
ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர் 3 என்பர், சிலர் 33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி என்பர். கற்றறிந்த இந்து ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களை, புராணங்களை) இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனே. அவனே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப் பதிலளிப்பார்.

இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கும் உள்ள வேறுபாடுகள்
இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God’s எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் ’s ஆகும். இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் நம்புகிறான். ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் ’s) ’s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)
ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்

பகவத் கீதை 7:20மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".

சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.

உபநிஷங்கள்:உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப் பாருங்கள்.

1. சந்தோக்ய உபநிஷம்சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்"

''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"

உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது

குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாகம்-15ல் பக்கம் 745)

குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

Sunday, 27 March 2011

2. அறிவியல் சான்று

2. வேதனையை உணரும் தோல்கள்



நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும்

(அல் குர்ஆன் 4:56)

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு. இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.
அது போல் தான் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது நபிக்கு இது எப்படித் தெரியும்? திருக்குர்ஆன் 'அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம்' என்று கூறாமல் 'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்' என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.