Sunday, 17 April 2011

பில்லி சூனியம்




விட்டு விடு கறுப்பு, விடாதே செருப்பு, என்று அபத்தத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இடையே இப்படியொரு உருப்படியான (கல்வி) நிகழ்ச்சி இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் வந்திருப்பது வியப்பான விஷயம்.
India TV தொலைக்காட்சியில் சனல் எடமருகு என்பவர் பில்லி சூன்யம் வைக்கும் சாமியார் ஒருவருடன் நேரடியாக மோதியிருக்கிறார். சனல் எடமருகு Indian Rationalists Association-ன் தலைவர். போட்டியில் சாமியார் தன் மந்திர பலத்தைப் பயன்படுத்தி எடமருக்குவைத் பலத்த முயற்சிகளுக்கும் பின்னர் சடமருக்குவைக் கொல்ல முடியாமல் தோற்றுப் போயிருக்கிறார். போட்டியில் சனல் மீது நீர் தெளிக்கப்பட்டிருக்கிறது, மயிற்பீலியால் அவர் வருடப்பட்டிருக்கிறார். இன்னும் சாமியார் மாவு பிசைந்து அதை ஊசியால் குத்தியிருக்கிறார்; கத்தியால் வெட்டியிருக்கிறார். தீ வளர்த்து வெட்டப்பட்ட மாவைப் பலி கொடுத்திருக்கிறார். இறுதியாக சாமியார் தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சி எங்காவது இணையத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. நல்ல தமாசாக இருந்திருக்கும்.
'ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இது பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

'ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ, வேதனையையோ ஏற்படுத்த முடியும்' என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.
                                                                                                                                     READ MORE

0 comments:

Post a Comment