கஜினி முஹமது பதினேழு முறை சோமநாதபுரம் கோயிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்கு பாடநூல்கள் சொல்லியுள்ளன. இல்லையா?
இந்தியாவில் கோயில்கள் என்பது சாமி கும்பிடுகின்ற இடம் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக்களஞ்சியங்களாகவும் அவை திகழ்ந்தன. இல்லாவிட்டால் தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டை மன்னர்கள் நடத்திய போர்கள் பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்டவைதான்.
இந்த அடிப்படையில்தான் கஜினிமுஹம்மது படையெடுத்ததும்.
கோயிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னர்களை கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வங்களைக் கொள்ளையிடவும், எதிரியின் பண்ணாட்டு ஆளுமையை அழிக்கவும்தான் கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன.
எந்த இஸ்லாமிய மன்னனும் தனது எல்லைக்குள் இருந்த இந்து கோயில்களையோ, தனது பாதுகாப்பில் இருந்த இந்து மன்னர்களின் கோயில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் அப்படித்தான். அவுரங்கசீப்புக்கு எதிராக சூழ்ச்சிசெய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும்தான் இடிக்கப்பட்டன. மற்றபடி முழுமையான மத சுதந்திரம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் தான் தமிழ்நாட்டிலிருந்து குமரகுருபரர் காசிக்கு சென்று முப்பது ஆண்டுகள் சமய பொழிவும் செய்து அங்கே குமாரசாமி மடம் ஒன்றையும் நிறுவினார்.
இன்னொன்றையும் யோசித்துப்பாருங்கள். தஞ்சை பெரிய கோயில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண / புத்த கோயில்களை இடித்து கட்டப்பட்டவைதானே! இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை ஆகிய இடங்களில் இருந்த புத்த கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி அந்த ஊருக்கு ஜனநாத மங்களம் என்று தனது பெயரைச் சூட்டவில்லையா?
சுபதாவர்மன் (கிபி 1193 1210) என்ற பார்மரா மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமண கோயில்களை கொள்ளையிடவில்லையா?
காஷ்மீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே தெய்வங்களை நிர்மூலம் செய்கின்ற அதிகாரி (தேவோத்வத நாயகன்) என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்ததாக கல்ஹணன் எழுதிய ராஜதரங்கிணி-யில் குறிப்பிடப்பட்டுள்ளதே?
எனவே கோயில் இடிப்பு என்பதை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும் மக்களின் செயலாகவும் கருத வேண்டியதில்லை.





0 comments:
Post a Comment