Sunday, 17 April 2011

அலாவுதீன் கில்ஜி ஜமீந்தார்களை ஒடுக்கினாரே?


அவர் இந்துவல்லாத இஸ்லாமிய இக்தாதர்களையும் தான் ஒடுக்கினார். மதவெறியன் என அவரை தூற்றுகின்றீர்கள். ஆனால் அவர் காலத்திய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜியாபரணி என்ன சொல்கின்றார் தெரியுமா? இஸ்லாம் மதத்திற்காக கில்ஜி ஒரு அரசன் என்ற முறையிலோ, தனி வாழ்விலோ எதுவும் செய்யவில்லை எனத் தூற்றினார். திருப்பித் திருப்பி சொல்கின்றோம் என நினைக்காதீர்கள். அரசியல் காரணங்களாக சில தனிநபர்களை இஸ்லாத்திற்கு மாற்ற அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை பெரும் மக்களை கட்டாயமாக மதம் மாற்றினார்கள் என நாம் புரிந்து கொள்ளக்கூடாது. அரசியல் நோக்கத்திற்காக குறுநில மன்னர்களோடு கட்டாயமாக மண உறவுகளை இந்து மன்னர்கள் ஏற்படுத்தி கொண்டது  பற்றி  வரலாற்றிலும் சங்கப் பாடல்களிலும் படிக்கின்றோம் இல்லையா? அப்படித்தான் இதுவும்.  இது எல்லாம் சரி என நான் சொல்ல வரவில்லை. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அதிகார வெறிபிடித்த மன்னர்களின் நடவடிக்கைகளை அவற்றிக்குறிய சூழலிலிருந்து விலகிப் பூதகப்படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறிகொண்ட பகையை ஏற்படுத்த பயன்படுத்தக்கூடாது.

0 comments:

Post a Comment