அல் குர்ஆன்

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி "அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார்.

அல் குர்ஆன்

"இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்!

அல் குர்ஆன்

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!'' என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.

அல் குர்ஆன்

"ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக் கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.

அல் குர்ஆன்

"என் சமுதாயமே! இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. என்னைப் படைத்தவனிடமே எனக்குரிய கூலி உள்ளது. விளங்க மாட்டீர்களா?

Sunday, 17 April 2011

மாந்திரிகம்



சரி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் நடமாடும் மாந்திரவாதிகள். இரண்டாவது எதிர்காலத்தை சொல்கிறேன், நல்லது, கெட்டதை கணித்து உங்களது வாழ்க்கையை வளபடுத்துகிறேன் என்று கூறும் ஜோதிடர்கள், நாடி ஜோதிடம் முதல் பல்வேறு ஜோதிடம் வரை. மூன்றாவது சாமியார்கள் கடவுளின் பக்கம் உங்களை நேருக்குகிறேன், உங்கள் பிரச்சனைகளை கடவுளிடம் பேசி தீர்க்க உதவுகிறேன், மத போதனைகளை கற்று தருகிறேன் என்று சொல்லும் இது போன்ற நபர்களிண்டம் தான் நம் அறிவை அடகு வைக்கிறோம். இவர்கள் உங்களது பலவீனம் என்ன என்பதை உங்களிடம் பேசி தெரிந்து கொண்டு அதற்க்கு தகுந்தா போல் உங்கள் மூளையை வாஸ் செய்கிறார்கள். எனவே பெண்கள் இது போன்ற விசயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

உழைத்து சம்பாதிக்காத காஞ்சி சங்கராச்சாரியார் முதல் நித்யானந்தா சாமிகள் வரை இவர்கள் எல்லாரிடமும் மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை, எல்லாம் கொட்டி கிடைக்கும். யார் உழைத்து சம்பாதிகிறார்களோ அந்த மக்களிடம் இது போன்ற சிந்தனைகள், செயல்கள், வக்கிரங்கள் வராது. உடல் உழைப்பு இல்லாமல் ஓசியில் மக்கள் கொடுக்கும் செல்வத்தை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் இது மாதிரிதான் செயல்படுவார்கள். இவர்களுக்கு என்ன பொண்டாட்டியா? பிள்ளைகளா? உறவினர்களா? நண்பர்களா? இவர்களுக்கு ஏதாவது சமூக பிரச்சனைகளா? பொருளாதார பிரச்சனைகளா? அரசியல் பிரச்சனைகளா? இவர்களுக்கு ஒன்றும் இல்லை. மக்களை ஏமாற்றி சம்பாதித்து சொகுசாக வாழவேண்டும் அவ்வளவு தான்.

எனவே இதுபோன்ற சாமியார்கள், ஜோதிடர்கள், குருக்கள், மந்திரவாதிகள் போன்றவர்களிடம் பெண்களே கவனமாக இருங்கள். ஆண்கள் பணத்தை மட்டும்தான் இழக்கிறார்கள் நீங்கள் கற்பையும் சேர்ந்து இழக்கவேண்டி வருகிறது. காஞ்சி சங்கராசாரி முதல் நித்யானந்தாவரை எல்லாம் போலிகளே. எதில் யாரும் விதிவிலக்கல்ல! எல்லா சாமியார்களும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றுபவர்கள்தான் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.சன்யாசிகள் என்று சொல்லிகொள்ளும் எல்லாரும் அறிவியல் ரீதியாக பெய்யர்களே. மனிதனாக பிறந்த எவனும் பெண்துணை இல்லாமல் வாழ்வேன் என்று சொன்னால் அவன் ஒன்று ஆண்மை இல்லாதவனாக இருக்கவேண்டும்!! ஏதாவது பேரும் நோய் இருக்கவேண்டும்!! இல்லை இதுபோல் எமாற்றுபவனாக இருக்கவேண்டும். 

ஜோசியம்





மனக் கஷ்டத்தோடு
வருகிறார்கள்
ஜோசியரிடம்..,
சொல்லப்படுகிறது
பரிகாரம்..,
உடனே தீர்கிறது
ஜோசியரின்
பணக்கஷ்டம்..!



















பில்லி சூனியம்




விட்டு விடு கறுப்பு, விடாதே செருப்பு, என்று அபத்தத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இடையே இப்படியொரு உருப்படியான (கல்வி) நிகழ்ச்சி இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் வந்திருப்பது வியப்பான விஷயம்.
India TV தொலைக்காட்சியில் சனல் எடமருகு என்பவர் பில்லி சூன்யம் வைக்கும் சாமியார் ஒருவருடன் நேரடியாக மோதியிருக்கிறார். சனல் எடமருகு Indian Rationalists Association-ன் தலைவர். போட்டியில் சாமியார் தன் மந்திர பலத்தைப் பயன்படுத்தி எடமருக்குவைத் பலத்த முயற்சிகளுக்கும் பின்னர் சடமருக்குவைக் கொல்ல முடியாமல் தோற்றுப் போயிருக்கிறார். போட்டியில் சனல் மீது நீர் தெளிக்கப்பட்டிருக்கிறது, மயிற்பீலியால் அவர் வருடப்பட்டிருக்கிறார். இன்னும் சாமியார் மாவு பிசைந்து அதை ஊசியால் குத்தியிருக்கிறார்; கத்தியால் வெட்டியிருக்கிறார். தீ வளர்த்து வெட்டப்பட்ட மாவைப் பலி கொடுத்திருக்கிறார். இறுதியாக சாமியார் தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சி எங்காவது இணையத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. நல்ல தமாசாக இருந்திருக்கும்.
'ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இது பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

'ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ, வேதனையையோ ஏற்படுத்த முடியும்' என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.
                                                                                                                                     READ MORE

இஸ்லாமியர்களுக்கு எதிரான குற்றசாட்டு

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

1.  இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்? வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?

2.  இஸ்லாமியர் படையெடுத்து வந்து இந்து கோயில்களை இடித்து சிதைத்தார்கள் என்பதற்குத்தான் ஆதாரம் இருக்கின்றதே?

3.  ஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாற்றினரே? இந்துக்களாக இருந்தவர் மீது ஜிஸ்யா என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாட நூல்களில் படித்திருக்கின்றோமே?

 4. அலாவுதீன் கில்ஜி ஜமீந்தார்களை ஒடுக்கினாரே?

5.  இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம் ஆனால் ஓரிருவரைக்கூட மதம் மாற்றியதில்லையே?

 6.  பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமிய கோயில்களை பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட இருந்திருக்கின்றார்களே?

7.   பழைய சங்கதிகள் கிடக்கட்டும் சமீபத்திய வரலாற்றுக்கு வருவோம். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்


8.    தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று இந்துக்கள் சொன்னார்களா? நம்பமுடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்??















தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று இந்துக்கள் சொன்னார்களா? நம்பமுடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?


இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது, அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமென்றால் இருக்கலாம். உயர் சாதி இந்து ஆதிக்க சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக்கொள்ள விரும்பியபோது சாதிகளாய் பிளவுகொண்டிருந்த மக்களை 'இந்துக்கள் ' என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது . எனவே 'இஸ்லாமியர்' என்றொரு எதிரியைக் காட்டி தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களை தங்களோடு இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது.

இன்னொன்றையும் நீங்கள் வரலாற்றுரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேயரின் வருகையோடு தேர்தல் அரசியலும், மக்கள் தொகை கணக்கீடும்(1911) இங்கே நுழைந்தது. இந்தக் கணக்கீட்டில் இஸ்லாமியர், கிறித்தவர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர் என தனித்தனியாகவே விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சூழலில் பாகிஸ்தானும் இந்தியாவோடு இணைந்திருந்தால் இஸ்லாமியர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்ப் போய் தேர்தல் அரசியலில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை இந்துத் தலைவர்கள் உணர்ந்தார்கள். இந்நிலையை எதிர்கொள்ள அவர்கள் இரண்டு வழிகளை மேற்கொண்டனர்.

ஒன்று: தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்களாக கருதவேண்டும் என்ற கருத்தைப் பரப்புவது, 1934 பிப்ரவரியில் அலகாபாத்தில் கூட்டப்பட்ட இந்து மகாசபையின் சிறப்புக் கூட்டமொன்றில் இக்கருத்து விவாதிக்கப்பட்டது. ஆரிய சமாஜிகளும் இதர சனாதனிகளும், தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்களாக கருதவேண்டும் என்ற கருத்தை எதிர்த்தனர். எனினும் அரசியல் லாபம் கருதி தலைவர்கள் இக்கருத்தை வற்புறுத்தினர். இறுதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை போன்றவற்றை மறுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இந்துமகாசபை "இருந்தாலும் அவர்கள் யக்ஞோபவீதம் (பூணூல்) அணியக்கூடாது " என அறிவித்தது.

இரண்டு: இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்து தனிநாடாக்கிவிட்டால் எஞ்சிய பகுதியில் 'இந்து ராஜ்யம்' அமைத்து அதில் தாங்கள் ஆட்சி செலுத்த முடியும் என உயர்சாதி இந்துக்கள் நினைத்தனர்.

உண்மை இப்படியிருக்க நாட்டுப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் என்று எனச் சொல்வது அபத்தம்.

பழைய சங்கதிகள் கிடக்கட்டும் சமீபத்திய வரலாற்றுக்கு வருவோம். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?


நாடு என்றால் என்ன, நாட்டுப்பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியில் கட்டமைக்கப்படுகின்றது. இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயோர் வருவதற்கு முன்பு இருந்ததுண்டா? எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பினால் அதனை நிறைவேற்றுவது தானே நியாயம்? என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விசயம் இது. விரிவாகப் பேசுவதற்கு இங்கே அவசியம் இல்லாததால் நேரடியாக நீங்கள் கேட்டதற்கு வந்துவிடலாம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராக தொடக்கக் காலத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்தே நேரடியாக போராடினர். குறிப்பாக 1857 முதல் சுதந்திரப்போரில் இஸ்லாமிய மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆங்கிலேயருக்கு எதிரான அகில இந்திய தேசிய உணர்வு என்பதை முதற்கட்ட இந்து தலைவர்கள் உருவாக்கியபோது ஆங்கிலேய ஆட்சியின் "புதிய இழிவு" களுக்கெதிராக இந்தியப் பழமையை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். இந்தியப் பழமை என்பதை இந்து பழமையாகவே முன்வைத்த இவர்கள் இந்த அடிப்படையில் ஆரிய சமாஜம், வர்ணாசிரம சபை, இந்து மகாசபை போன்ற புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். இன்றைய 'இந்துத்துவம்' 'இந்து ராஷ்டிரம்' ஆகிய கருத்தாக்கங்கள் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது இந்து மகாசபையில்தான் என்பது இன்று அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. சவர்க்கார், பாய் பரமானந்தர் போன்றவர்களால் தலைமை தாங்கப்பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. குறிப்பாகக் காந்தியின் வருகைக்கு முன்பு இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்து மகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர் பிரிவினைக்கு முற்பட்ட இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாக பிரிக்கவேண்டும் என முதன்முதலில் சொன்னவர்களில் ஒருவர். இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தான் முதலியவற்றோடு இணைந்து ஒரு மாபெரும் முஸ்லிம் பேரரசு உருவாக்கப்படவேண்டும்.

அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்துவிடவேண்டும். இங்குள்ள இஸ்லாமியர்கள் அங்கே போய்விட வேண்டும் என்றார். தனக்கு 1905-ஆம் ஆண்டு வாக்கிலேயே இக்கருத்து தோன்றியது எனவும் அவர் கூறினார். பின்னர் 1937- ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போது தலைவராக இருந்த சவர்க்கார் இந்தியாவை நாம் ஒற்றை தேசமாக நாம் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது இஸ்லாமியர்களின் தேசம்; என்றார்.

இங்கொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இஸ்லாமியருக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம் லீக்கால் முதன் முதலில் எப்போது வைக்கப்பட்டது தெரியுமா? 1940- ஆம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான். அதற்கு முன்பே இந்துமகாசபை இந்த கோரிக்கையை முன்வைத்து விட்டது என்பதுதான் உண்மை.

பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமிய கோயில்களை பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட இருந்திருக்கின்றார்களே?


உண்மைதான். நாம் முன்பே குறிப்பிட்டபடி இவை எல்லாமே அரசியல் நோக்கில் செய்யப்பட்டவைதான். இஸ்லாமிய மன்னர்களின் காலத்திலும் இந்து கோயில்கள் பராமரிக்கபட்டதால்தான் இன்றளவும் பழமையான கோவில்கள் நாடெங்கும் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.

ராஜபுத்திரர் பார்ப்பணர் போன்ற இந்து மத ஆதிக்க சக்திகள் இஸ்லாமிய மன்னர்களிடம் உயர் அதிகாரிகளாக இருந்திருக்கின்றனர். அக்பரிடம் அதிகாரியாக இருந்த ராஜாமான்சிங் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். முஹம்மது பின் துக்ளக் காலத்தில் அலிஷா நாது எனும் இஸ்லாமிய குறுநிலத் தலைவன் தனக்குட்பட்ட பகுதியில் கொடுமைகள் செய்வதாகப் பரான் என்ற இந்து நிலப் பிரபு முறையிட, இந்தப் பகுதி நாதுவிடமிருந்து பறிக்கப்பட்டு பரானிடம் வழங்கப்பட்டது. இதற்காக நாது சகோதரர்கள் துக்ளக்கை எதிர்த்து கலகம் செய்தனர்.

அயோத்தியிலுள்ள அனுமான் கோயில் தொடர்பாக சுன்னி இஸ்லாமியர்களுக்கும், இந்து சாதுகளுக்குமிடையே பிரச்னை வந்தபோது டில்லி மன்னன் வாஜித் அலிஷா இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். இது தொடர்பாக அலிஷா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் சுமார் முன்னூறுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தியும் உள்ளது.